ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இருவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

pararajasinghamதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் விளக்கமறியல் வைக்க கொழும்பு முதன்மை நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

பிரதீப் மாஸ்டர் என்ற எட்வின் சில்வா கிருஸ்ணா கந்தராஜ், காஜன் மாமா என்று அழைக்கப்படும் கே.ரெங்கசாமி ஆகியோரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிவான் சிஐடிக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இதேவேளைää பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் சுவிட்ஸர்லாந்தில் இருப்பதால் அவர்களை கைதுசெய்ய இன்டர்போலின் உதவியை நாடவுள்ளதாக சிஐடி நீதிமன்றத்தில் அறிவித்தது.

2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதியன்று ஜோசப் பரராஜசிங்கம் சென் மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

-http://www.tamilwin.com

TAGS: