ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் முக்கிய பிரச்சனைகளை உடனடியாக தீர்க்காவிட்டால் கூட்டணி நாடுகள் பிரிந்து செல்வதை யாராலும் தடுக்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஜேர்மனி சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலுடன் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே பங்கேற்றார்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது, யூரோ நாணயத்தின் மதிப்பை சீராக வைத்திருப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது.
மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து புகலிடம் கோரி வரும் முயற்சியில் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழந்துள்ளதை தடுக்க ஐரோப்பிய கூட்டணி நாடுகள் தவறியுள்ளது.
அகதிகள் மற்றும் ஒவ்வொரு நாட்டின் எல்லைகளை திறந்து விடுவது தொடர்பான விவகாரங்களில் கூட்டணி நாடுகள் மிகவும் தாமதமாகவே செயல்பட்டு வருகிறது.
மேற்கூறிய பிரச்சனைகளை தீர்க்க ஒட்டுமொத்த கூட்டணி நாடுகளும் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முன்வர வேண்டும்.
இல்லையெனில், பாரம்பரியமிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிந்து சென்று அழிவை சந்தப்பதை யாராலும் தடுக்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிராங்கோயிஸ் ஹோலண்டேவின் கருத்தை வரவேற்று பேசிய ஜேர்மனி சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் பேசியபோது, அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பான ஐ.நா சபையின் விதிமுறைகள் வழக்கத்திற்கு எதிரானதாக இருக்கிறது.
மேலும், அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பான மிகப்பெரிய சுமையை ஐரோப்பிய நாடுகள் மீது மட்டுமே சுமத்திருப்பது ஏற்றக்கொள்ள முடியவில்லை.
தற்போது உள்ள வழக்கத்தை மாற்றி புதிதாக விதிமுறைகளை கொண்டு வர ஐ.நா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஞ்சலா மெக்கல் வலியுறுத்தியுள்ளார்.
-http://world.lankasri.com