வெளி உலகுக்கு தெரியாமல் ஜேர்மனி நாடு கூடுதல் தங்க கட்டிகளை பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அந்நாட்டின் மொத்த தங்க கட்டிகளின் இருப்பு தொடர்பான தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மத்திய வங்கியான Bundesbank அந்நாட்டின் தங்க கட்டிகளின் இருப்பு தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இதில், உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் 2,70,316 தங்க கட்டிகளை ஜேர்மனி நாடு சொந்தமாக சேமித்து வருகிறது.
ஆனால், இவற்றின் பெரும்பாலான தங்க கட்டிகள் ஜேர்மனி நாட்டின் வங்கிகளில் பாதுகாக்கப்படவில்லை.
ஒட்டு மொத்த தங்க கட்டிகளின் அதிக எண்ணிக்கையை நியூயோர்க்கில் உள்ள Federal Reserve வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையில் பல நாடுகளின் தங்க கட்டிகள் பாதுகாக்கப்படுவது இந்த Federal Reserve வங்கியில் தான்.
நியூயோர்க்கிற்கு அடுத்தப்படியாக ஜேர்மனியின் தங்க கட்டிகள் பிரான்ஸில் உள்ள பாரீஸ் வங்கியிலும், பிரித்தானியாவில் உள்ள லண்டன் வங்கியிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
எனினும், எதிர்வரும் 2020ம் ஆண்டிற்குள் பாரீஸில் உள்ள ஒட்டுமொத்த தங்க கட்டிகளையும், லண்டனில் உள்ள 13 சதவிகித தங்க கட்டிகளையும், நியூயோர்க்கில் உள்ள 37 சதவிகித தங்க கட்டிகளையும் ஜேர்மனியின் Frankfurt நகருக்கு திருப்பி கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஜேர்மனி மத்திய வங்கியின் தலைவரான Jens Weisman கூறுகையில், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய இருநாடுகளும் யூரோ என்ற நாணயத்தை கொண்டுள்ளதால், இதன் மூலம் சர்வதேச நாணய மாற்று விற்பனை செய்துக்கொள்ள முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2020ம் ஆண்டிற்கு பிறகு ஜேர்மனியின் 50 சதவிகிதத்திற்கு மேலான தங்க கட்டிகள் உள்நாட்டிலேயே பாதுகாக்கப்படும்.
1950 மற்றும் 1960 ஆண்டுகளில் நடைபெற்ற பனிப்போரின்போது ஜேர்மனி நாட்டின் செல்வங்கள் பறிப்போகும் அபாயத்தில் இருந்ததால் தங்களிடம் இருப்பில் இருந்த தங்க கட்டிகளை வெளிநாட்டு வங்கிகளுக்கு இடம் மாற்றம் செய்தது.
ஜேர்மனி நாட்டின் மொத்த தங்க கட்டிகளின் இருப்புகளை வெளிப்படையாக மக்களுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் அறிவித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com