கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் அண்மையில் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்திருந்த ஸ்ரீலங்கா சிப்பிங் நிறுவனத்தின் முகவரான மோஷிப் நிறுவனத்திற்கு சொந்தமான அவன்கார்ட் கப்பல் சம்பந்தமான விசாரணைகளை கடற்படையினரிடமே ஒப்படைத்துள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசியக் கொடியுடன் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்திருந்த இந்த கப்பல் இலங்கை நோக்கி வரும் போது இந்திய அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டிருந்தால், பாரிய பிரச்சினையை இலங்கை எதிர்நோக்கியிருக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மூன்று பேரை இறக்கி விட வேண்டிய தேவை இருப்பதாக கூறி காலி துறைமுகத்திற்கு அருகில் வந்த இந்த கப்பல் மீது சந்தேகம் கொண்ட கடற்படையினர் அதனை சோதனையிட்ட போது அதில் ஆயுதங்கள் இருப்பது தெரியவந்துடன் கப்பலையும் கைப்பற்றினர்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் அர்ஜூன ரணதுங்க,
கப்பல் ஒன்று துறைமுகத்திற்கு வரும் முன்னர் அது குறித்து எமக்கு அறியதர வேண்டும். மூன்று பேரை இறக்கி விட வேண்டும் என்ற வந்த இந்த கப்பல் மீது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து நடத்திய சோதனையில் அதில் 800க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருந்துள்ளன.
கொழும்பில் உள்ள கப்பல் சொந்தக்காரிடம் அதனை ஒப்படைக்கவே வந்தார்களாம். எனினும் உரிமையாளரோ, முகவரோ அது பற்றி எமக்கு அறிவிக்கவில்லை.
ஆயுதங்கள் கொண்டு வரப்படுமானால் அது பற்றி எமக்கு அறிவிக்க வேண்டும். இந்தியாவிடம் இந்த கப்பல் சிக்கியிருந்தால், எமக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.
இலங்கை கொடியுடன் இந்த கப்பல் வந்துள்ளது. கப்பலை துறைமுகத்திற்குள் வர அனுமதிக்கவில்லை.
தேவையெனில் துறைமுகத்திற்குள் கப்பலை வரவழைத்து விசாரணைகளை நடத்த நாங்கள் கடற்படையினருக்கு அனுமதி வழங்கினோம் என்றார்.
அதேவேளை இந்த கப்பலை தடுத்து கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்தார்.
-http://www.tamilwin.com
“சொந்த தமிழனின் அழிவில் மகிழ்ச்சி கொள்ளும் இந்த தமிழர்களை எப்படி மலாய் காரான் மதிப்பான்?-Anonymous ”
இந்த Anonymous இப்ப இப்படி கூறி அங்கலாயிக்குதே? இதே மாதிரிதான் தமிழ்நாட்டு தமிழனின் நிலையும்கூட! ஆரியர், தெலுங்கர் ஆக்கரமிப்புகலாலும் சதியாலும் பல்வேறு சிக்கலிலும் அறியாமையிலும் மதிமயக்கத்திலும் சிறுமையிலும் கீழ்நிலையிலும் உள்ளனர்! அவர்களும் தமிழர்கள் தானே? அவர்களின் சிறுமையிலும் கீழ்நிலையிலும் நீங்கள் ஈழத் தமிழர்கள் எள்ளிநகையாடி அவர்களை சதா காலமும் சிறுமைப்படுத்தி மகிழ்கிரிர்கள்! ஏன்? ஏன்?…. அவர்களும் தமிழர் என்று அவர்கள் கீழ் நிலைக்கு கரிசனை கொண்டு அவர்கள் திருந்த, மீட்சிபெற நீங்கள் ஏன் உதவ முன்வரவில்லை? அல்லது அவர்களுக்கு அறிவுரையோ ஆதரவோ தர முன்வரவில்லை? தமிழ்நாட்டு தமிழன் இப்படியே கீழ்நிலையில் இருந்து ஒழிந்துபோகட்டும் என்று அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கிரிர்கள்? ஆனால் ஈழ தமிழனின் கீழ்நிலையை சிறுமையை நாங்கள் எடுத்துகூறினால் மட்டும் “சொந்த தமிழனின் அழிவில் மகிழ்ச்சி கொள்ளும் இந்த தமிழர்” என்று நாம் அனைவரும் தமிழர் என்ற போதுநிலைக்கு வருகிறிர்கள்! உங்களுக்கு தேவைவந்தால் நாம் எல்லோரும் தமிழர் என்பீர்! தேவைமுடிந்துவிட்டால் நாங்கள் ஈழ தமிழர், தமிழ்நாட்டு தமிழன் தமிழனே கிடையாது என்று கலட்டிவிடுவிர்! நால்லா இருக்கு ஈழ தமிழரின் குள்ளநரித்தனம்!!! இந்த கருத்துச்ச்சன்டையை உருவாக்கியதே இந்த “Anonymous ” தான்! அவர் பல காலமாக தமிழ்நாட்டு தமிழர்களை கேவலமாக கீழ்த்தரமாக விமர்சித்ததின் விளைவாகதான் நானும் ஈழ தமிழர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டி வந்தது!!!!! இனியும் “Anonymous ” தொடர்ந்தால் நானும் ஈழ தமிழர்க்கு எதிராக விமர்சிப்பேன்!!!
-குஞ்சி மயிரை மீன்
ஈழ தமிழர் குரல் மனித உரிமை மீறலில் ஓங்கி இருப்பதை குறைக்க சிறிலங்கா அரசாங்கமே இதையும் ஏற்பாடு செய்து இருக்கலாம் அல்லவா???
எவன் எவனை வேன்றுமென்றால் நாய் குறைபதைபோல் குறைத்துக்கொண்டு இருக்கட்டும் எமக்கு இதை எல்லாம் கேட்க வேண்டும் என்பது இல்லை ……என் என்றால் நான் தமிழன் ,தமிழனுக்கு மட்டும்தான் தமிழனை பேச யோக்கியதை உண்டு .
எங்கள் தலிவர் தேவைப்படும்போதும் ..பதவியில் இல்லாத போதும் ஈழ தமிழர்களுகாக அழுவார் …அடிக்கடி டெசோ (செம்மொழி) மாகாநாடு (??) ஒரு குப்பத்தில் கீர மணியுடன் கூடி ஒப்பாரிவைத்து போண்டா அருந்தி ..காபி சாப்பிட்டு ..பின்னர் அறிக்கை வெளியிடுவர் ..நாங்கள் கைதட்டுவோம்
இலங்கையில் கல்வி எல்லோருக்கும் இலவசம்…பல்கலைகழக அனுமதி மதிப்பெண்கள் ரீதியில் தீர்மானிக்க படுகின்றன …பல்கலைகழகம் வரை தமிழில் கல்வி போதனை ..ஒரு காலத்தில் தங்கள் பிள்ளைகளை வேலைகரகளாக அனுப்பிய மலையாக தமிழர்களில் வாழ்க்கை இன்று வேறு பலர் பலகலைகழகத்தில் பயிலுகின்ரர்கள் ..எல்ல்லோருக்கும் எழுத படிக்கச் தெரியும் குறைந்த கல்வி grade 9…பலர் உயர் பதவிகளில் …பலர் வெளி நாட்டு தூதர்கள் …வர்த்தகர்கள் …தங்க ..புடவை வர்த்தகம் இவர்கள் கையில் ..இலங்கையில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகள் உரிமையாளர்கள் ….இவர்கள் வேலைக்காக ..வெளிநாடு செல்வது சாதாரணம் …இதே இந்திய வம்சாவளிகளுக்கு தங்க தமிழகத்தில் உறவினர் உண்டு அனால் ….குடிசை வாழ்கை ..பட்டினி …படிப்பறிவு இல்லை உண்மையா ? பொய்யா ?
இப்படிதான் இருக்கணும் .. தமிழனை தமிழனே எதிராய் கருதனும் .. நாம அடிச்சுக்குனும் .. சண்டை போடணும் . அப்பத்தான் தமிழன் பெருமயாக வாழலாம் ..
இந்திய கடலில் பிடிபட்டிருந்தால் சனீஸ்வரன் T N பாலுவின் மீன்பிடி படகுகளில் ஏற்றபட்டு நல்ல விலைக்கு வெளிநாட்டில் விற்க்கபட்டு இருக்கும்