உலகிற்கே அச்சுறுத்தலான நாடு “பாகிஸ்தான்”

pakistan terrorஉலகிற்கே அச்சுறுத்தலாக பாகிஸ்தான் விளங்கிறது என சி.ஐ.ஏ.-வில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கெவின் ஹல்பெர்ட் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வருகிற 22ம் திகதி வாஷிங்டன் செல்கிறார், அப்போது பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அணு ஆயுதங்களை வேகமாக குவித்து வருவது, தீவிரவாத அச்சுறுத்தல்களின் தாயகமாக உருவாகி வருவது உள்ளிட்ட பல காரணங்களால் பாகிஸ்தான் கிட்டதட்ட உலகிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.-வில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கெவின் ஹல்பெர்ட் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அமெரி்க்காவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் இந்த உலகிற்கே அச்சுறுத்தலாக பாகிஸ்தான் மாறிவிடும்.

தற்போது நிலவிவரும் சூழ்நிலைகள் நாட்டை தவறான பாதைக்கு கொண்டு செல்கிறது, பாகிஸ்தான் மக்களில் பெரும்பாலானவர்கள் தலிபான் குழுக்களை தீய சக்திகளாகவே பார்ப்பதில்லை.

பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஜிகாதி குழுக்களை பயன்படுத்தி வருவதை நியாயப்படுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி தீவிரவாதத்தை ஒழிக்காததால், இன்று உள்நாட்டு பாதுகாப்பே கேள்விக்குறியாக மாறிவருகிறது.

தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானின் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன, இதனால் தீவிரவாதிகளின் கை ஓங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com