துருக்கியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 86 பேர் பலி…186 பேர் படுகாயம்

ankara_rally_001துருக்கி நாட்டின் தலைநகரில் நடைபெற்ற அமைதி ஊர்வலம் ஒன்றில் சற்று முன்னர் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததில் 86 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி அரசிற்கும் அங்குள்ள குர்து இன போராளிகளுக்கும் இடையே தினமும் யுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்த யுத்தத்தை நிறுத்துமாறு சில சமூக நல அமைப்பினர் துருக்கியின் தலைநகரான அங்கராவில் இன்று அமைதி ஊர்வலம் மேற்கொண்டுள்ளனர்.

ரயில் நிலையம் அருகில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துக்கொண்ட இந்த ஊர்வலத்தில் சற்று முன்னர் அடுத்தடுத்து இரண்டு பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இந்த தாக்குதலில் 86 பேர் பலியாகியுள்ளதாகவும், 186க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெடிகுண்டு தாக்குதல் குறித்து தகவல் வெளியிட்டுள்ள துருக்கி நாட்டின் ஜனாதிபதியான Recep Tayyip Erdogan, இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்றும், இதில் மனித வெடிகுண்டாக ஊர்வலத்தில் நுழைந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com