அவுஸ்திரேலியாவில் வாழும் மக்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்கள் பிடிக்காவிட்டால் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு பிரதமர் தெறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி நகரில் அமைத்துள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் 15 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 58 வயது பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
தாக்குதலுக்கு பதலடி கொடுத்த பொலிசார், சிறுவனையும் சுட்டு வீழ்த்தினர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்திய இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஃபர்ஹாத் ஜபார் என தெரியவந்தது. மேலும், இது ஒரு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து, அவுஸ்திரேலிய பிரதமரான மால்கொம் ட்ர்ன்புல், அந்நாட்டு இஸ்லாமிய தலைவர்களிடம் நேற்று நேரடி ஆலோசனையில் ஈடுப்பட்டார்.
அப்போது பேசிய மால்கொம், அவுஸ்திரேலிய நாட்டு சட்டதிட்டங்கள், கொள்கைகள் உள்ளிட்டவைகள் பிடிக்காவிட்டால், வெளியே ஒரு பரந்த உலகம் இருக்கிறது.
மேலும், மக்களுக்கு இடம்பெயரும் உரிமை உள்ளதால், எதிரான கருத்துள்ள மக்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறலாம் என இஸ்லாமிய தலைவர்களிடம் தடாலடியாக பேசியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தீவிரவாத நோக்கத்தோடு, தீவிரவாதத்தை விதைக்கும் வகையில் பரப்புரை செய்து இங்கு குடியுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கி சூடு நிகழ்ந்த Parramatta நகரின் இஸ்லாமிய தலைவரான Neil El-Kadomi Neil என்பவர் தொழுகையில் ஈடுப்பட்ட இஸ்லாமியர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அதில், பல போராட்டங்களுக்கு பிறகு அவுஸ்திரேலியா நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறீர்கள்.
அவுஸ்திரேலியா நாட்டின் இறையாண்மையையும், குடியுரிமையையும் அவமதிக்கும் செயலில் ஈடுப்படுவதற்கு பதில் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுவது சிறந்தது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com