பிள்ளையான் கைது

pillaiyaanகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(மேலதிக இணைப்பு)கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போதே விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை குறித்து, ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினர் பிள்ளையானிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.

இதேவேளை, அண்மைய விசாரணைகளின் பிரகாரம் ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுமானது, முன்னாள் இராணுவ கேர்ணல் ஒருவரால் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதாகவும், பிள்ளையான் அதனை சரண் என்பவருக்கு கைமாற்றியதாகவும் செய்திகள் வெளியாகிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி
விசாரணைக்கு வருமாறு பிள்ளையானுக்கு அழைப்பு

-http://www.tamilwin.com

TAGS: