“அகதிகளை திருப்பி அனுப்பாவிட்டால் ஜேர்மனி சான்சலர் மீது வழக்கு தொடுப்போம்”: பவேரிய அரசு கடும் எச்சரிக்கை

refugee_merkel_001ஜேர்மனி நாட்டிற்குள் கட்டுக்கடங்காமல் அகதிகளை நுழைந்து வருவதை தடுக்க ஜேர்மனி அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் மீது வழக்கு தொடுக்கப்படும் என பவேரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நடப்பாண்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ன்வர்கள் ஜேர்மனி நாட்டிற்குள் நுழையை வாய்ப்புள்ளது.

இந்த புள்ளி விபரம் வெளியானதை தொடர்ந்து, ஜேர்மனியில் உள்ள பவேரியா மாகாண அரசு ஏஞ்சிலா மெர்க்கலிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது.

பவேரியா ஜேர்மனியில் உள்ள மிகப்பெரிய பரப்பளவை கொண்ட சுயாட்சி பெற்ற மாகாணம் ஆகும்.

இந்த மாகாணத்தை ஆட்சி செய்யும் கிறித்துவ சமூக கட்சி தலைவரான Horst Seehofer கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அவசர அமைச்சரவை கூட்டத்தை நடத்தியுள்ளார்.

கூட்டத்தில் பேசிய அவர், லட்சக்கணக்கான அகதிகளுக்கு ஜேர்மனி மத்திய அரசு தனது கதவுகளை சுதந்திரமாக திறந்து விட்டுள்ளது.

இவ்வளவு எண்ணிக்கையில் வரும் அகதிகளை எதிர்க்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு மத்திய அரசு மாகாண அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

அகதிகளுக்கு குடியேற்ற அனுமதி தருவது தொடர்பான தனது கொள்கை முடிவுகளை மத்திய அரசு உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும், ஆஸ்திரியா, ஜேர்மனி எல்லைகளுக்குள் அகதிகள் நுழைவதற்கு முன்னர் அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.

இல்லையெனில், ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் மீது அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என Horst Seehofer எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பவேரியாவின் உள்துறை அமைச்சரான Joachim Herrmann பேசியபோது, அகதிகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜேர்மனி மத்திய அரசு மாற்றிக்கொள்ளாவிட்டால், பவேரிய அரசுக்கு இருக்கும் சுயாட்சி அதிகாரங்களை பயன்படுத்தி ஏஞ்சிலா மெர்க்கலிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்போம் என அவர் அமைச்சர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-http://world.lankasri.com