சித்ரவதை செய்வதே ஜிகாதி ஜானின் பொழுதுபோக்கு: விடுதலையான ஐ.எஸ். பிணையக்கைதி அதிர்ச்சி தகவல்

freed_hostage_001ஐ.எஸ்.தீவிரவாதிகளால் பிடிக்கப்படும் பிணையக்கைதிகளை கொடூரமாக சித்ரவதை செய்வதே ஜிகாதி ஜானின் பொழுது போக்கு என விடுதலையான பிணையக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Danish புகைப்படக்காரரான Daniel Rye Ottosen சிரியாவின் உள்நாட்டு கலவரங்களால் பாதிப்புக்குள்ளான மக்களின் புகைப்படதொகுப்பை உருவாக்கும் பொருட்டு அலெப்போ சென்றிருந்தார்.

சிரியா சென்ற மூன்றாவது நாளில் ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட Ottosen அலெப்போ நகரில் வேறு பிணையக்கைதிகளுடன் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

சிறைக்கு அடிக்கடி வந்து போகும் ஜிகாதி ஜான் பிணைக்கைதிகளை கொடூரமாக சித்ரவதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக Ottosen தெரிவித்துள்ளார்.

மூக்கை அறுத்து விடுவதாக மிரட்டி Ottosen ஐ நடனமாட வைத்து, பின்னர் ஆயுதங்களால் தாக்கி சித்ரவதை செய்துள்ளார்.

ஐ.எஸ்.தீவிரவாதிகளை நேருக்கு நேர் பார்ப்பவர்களை மிகவும் கொடூரமாக தண்டிப்பதாக தெரிவித்த அவர், சித்ரவதை செய்வதற்கென்றே பிணையக்கைதிகளை பல வகையில் தூண்டுவதாக தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.தீவிரவாதிகளால் 13 மாதங்கள் கடுமையான சித்ரவைதைக்கு பின்னர் Ottosen குடும்பத்தினர் வழங்கிய பெருத்தொகையை பெற்றுக்கொண்டு கடந்த 2014, யூன் மாதம் விடுவித்தனர்.

Ottosen பிணையக்கைதியாக இருந்தபோது அவருடன் சிறையில் இருந்த James Foley என்பவரை ஜிகாதி ஜான் கழுத்து துண்டித்து கொலை செய்யும் காட்சிதான் உலகெங்கும் முதன்முதலில் வெளியான பதிவு.

-http://world.lankasri.com