ஈராக் வான் பரப்பினுள் ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைகள் மீது தாக்குதல் நடத்த என ரஷ்ய விமானம் வந்தால் அதனை தாக்குமாறு அமெரிக்கா தனது விமானிகளுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சற்று முன்னரே இந்த உத்தரவை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டு உள்ளது. இதனை அன் நாட்டின் தலைவர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ளார் என்ற தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது. ஈராக்கின் மேல் பறப்பில் ஈடுபட்டுள்ளவேளை , ஏதாவது ரஷ்ய போர் விமானத்தை பார்த்தால் இனிமேல் எந்த ஒரு முன் அறிவித்தலும் இன்றி தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சு தனது விமானிகளுக்கு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யா இதுவரை எந்த ஒரு அறிவித்தலையோ இல்லை அதிருப்த்தியையோ வெளியிட வில்லை என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடும் பனிப் போர் ஒன்று மூண்டுவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் , ரஷ்யாவின் போர் விமானம் ஒன்றும் இதுபோன்றே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
-http://www.athirvu.com
சபாஸ்……சரியான போட்டி