இணங்கியப்படி அரசாங்கம், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம் ஏ சுமந்திரன் ஆகியோர் கோரியுள்ளனர்.
தமது விடுதலை கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று இருவரும் தனித்தனியே சந்தித்தனர்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த செல்வம் அடைக்கலநாதன், போராட்டம் நடத்திவரும் அரசியல்கைதிகள் சோர்வடைந்த நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தாம் இவர்களி;ன் விடயத்தை ஜனாதிபதியினதும்; பிரதமரினதும் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை சிறைச்சாலைக்கு சென்று சுமந்திரன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 36 அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடினார்.
-http://www.tamilwin.com