பாகிஸ்தானில் மத உரிமைக்கு அச்சுறுத்தல், நிலவி வருவதால் அந்த நாட்டை “அச்சுறுத்தல்மிக்க நாடுகள்’ பட்டியலில் சேர்க்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், அதிபர் பதவி வேட்பாளருமான மார்கோ ரூபியோ அந்த நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
2014-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மத உரிமைகளின் நிலவரம் குறித்த வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மத உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து அதில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தானை “அச்சுறுத்தல் மிக்க நாடுகள்’ பட்டியலில் சேர்க்க ஒபாமா அரசு தவறி விட்டது.
பாகிஸ்தான் மட்டுமின்றி, சிரியா, வியத்நாம் நாடுகளிலும் மத உரிமைகள் நசுக்கப்படுகின்றன.
அந்த நாடுகளும் “அச்சுறுத்தல் மிக்க நாடுகள்’ பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.
அனைத்து மதங்களுக்கும் சம உரிமை அளிப்பதே அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கை.
எனவே, உலக நாடுகளில் மத உரிமைகள் மீறப்படுவதை அமெரிக்கா உரிய முறையில் கண்டிக்க வேண்டும் என்றார் அவர்.
-http://www.dinamani.com