உலக அளவில் அதிக கோடிஸ்வரர்களை உடைய நாடு: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா

china_usa_001உலக அளவில் அதிக கோடிஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.

ஷாங்காயை சேர்ந்த ஹூருன் ஆராய்ச்சி நிலையம் உலகில் அதிக பில்லினியர்களை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முதல் முறையாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.

அதாவது அமெரிக்காவை விட 60 கோடிஸ்வரர்களை அதிகமாக கொண்டு 596 கோடிஸ்வரர்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

இது ஒரு  மாபெரும் திருப்பு முனை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் அதிக வளமிக்க நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ் உலக கோடிஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அவர் கடந்த 21 ஆண்டுகளில் 16வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

சீனாவின் மிக பெரிய கோடிஸ்வரரான வாங் ஜியான்லினினுடைய சொத்து மதிப்பு பில்கேட்சின் சொத்துமதிப்பில் பாதியை விட குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com