விலங்குகளை சித்ரவதை செய்வதின் உச்சக்கட்டம்: இறைச்சி கூடத்தை அதிரடியாக மூடிய மேயர்

animal_injured_001பிரான்ஸ் நாட்டில் விலங்குகளை கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் சம்பந்தப்பட்ட இறைச்சி கூடத்தை மூட மேயர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு பிரான்ஸில் Abattoir d’Ales என்ற இறைச்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த இறைச்சி கூடத்தில் வருடத்திற்கு 3,000 குதிரைகள், 20,000 பன்றிகள், 40,000 ஆடுகள் மற்றும் 6,000 மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன.

ஆனால், அரசு வலியுறுத்தியுள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் விலங்குகளை சித்ரவதை செய்து கொல்வதாக அந்த இறைச்சி கூடம் மீது புகார்கள் எழுந்தன.

இதனை கருத்தில் கொண்ட L214 என்ற விலங்குகள் நல அமைப்பு ஒன்று ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளது.

புகார் கூறப்பட்ட இறைச்சி கூடத்திற்கு செல்லும் நபர் ஒருவரிடம் ரகசிய கமெராக்களை கொடுத்து இறைச்சி கூடத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தியுள்ளனர்.

50 மணி நேரம் தொடர்ந்து பதிவான காட்சிகளில், விலங்குகளை காட்டுமிராண்டித்தனமாக சித்ரவதை செய்து கொல்வது எவ்வித சந்தேகமின்றி உறுதி செய்யப்பட்டது.

மாடுகளை இரும்பு கொக்கிகளில் கட்டி தொங்க விட்டு கழுத்தை வெட்டுவதும், சிறு கூண்டிற்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பன்றிகளை எரிவாயு செலுத்தி மூச்சு திணறவைத்து கொல்வதும், குதிரைகளை துப்பாக்கியால் சுட்டு கொல்வது உள்ளிட்ட கொடூர காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த வீடியோ காட்சிகள் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ காட்சிகளை கண்டு வேதனை அடந்த அந்நகர மேயரான மேக்ஸ் ரோஸ்டன் புகார் கூறப்பட்டுள்ள இறைச்சி கூடத்தை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை குறித்து பேசியுள்ள விலங்குகள் நல ஆர்வலரான Brigitte Gothiere, மேயரின் இந்த நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது.

ஆனால், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இறைச்சி கூடங்களிலும் விலங்குகள் சித்ரவதை செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றும், அரசு வலியுறுத்தியுள்ள விதிமுறைகளை அனைத்து இறைச்சி கூடங்களும் பின்பற்றுகின்றனவா என்பதை நகராட்சி மேயர்கள் கண்காணிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

-http://world.lankasri.com