சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா ராணுவம் அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வெளித்தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த மாதம் இறுதியில் இருந்து தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சிரியாவில் வலுவிழந்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வேதேவ் கூறியவை பின்வருமாறு,
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பலத்தை வலுவிழக்கச்செய்யவே ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், நாங்கள் பஷார்-அல்-ஆசாத்தை ஆட்சியில் நீடிக்க வைப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மேலும், நாங்கள் வான்வெளித்தாக்குதல் நடத்திய போது ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லாத குழுக்களின் மீதும் கடுமையாக தாக்குதல் தொடுக்கப்பட்டதாக அமெரிக்கா சொல்லி வருகிறது. ஆனால், ஆசாத் தான் சிரியாவை ஆட்சி செய்ய வேண்டும் என ரஷ்யா ஒருபோதும் விரும்பவில்லை.
யார் சிரியாவை ஆட்சி செய்ய வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் தான் தீர்மானிப்பார்கள். இப்போதைக்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை வலுவிழக்க செய்ய வேண்டும். அப்போது தான், அங்கு அமைதியை கொண்டு வர முடியும் என்று கூறினார்.
-http://www.athirvu.com