கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அவரோடதாக இருக்க வாய்ப்பில்லை என ஓய்வு பெற்ற, பேராசிரியரும் இந்திய இரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடைய முன்னாள் இந்திய கடற்படை மரைன் கமாண்டோ, கார்கில் என அழைக்கப்படும் எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் எம்.சுப்ரமணியம் ஆங்கில இணையத்தளமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அச் செவ்வியின் விபரம் வருமாறு,
ரோ புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய பேராசிரியர் எம்.சுப்ரமணியம் இந்தியா அல்லது இலங்கை இதுவரையிலும் பிரபாகரனின் சரியான ஒரு இறப்பு சான்றிதழ் மற்றும் மரபணு பரிசோதனை சான்றிதழ் வழங்காமைக்கான காரணத்தை விளக்கினார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மூலம் மூடப்பட்ட சபுகஸ்கந்த உர தொழிற்சாலை கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக தொழில் ரீதியாக ஒரு பொறியியலாளராக பேராசிரியர் சுப்ரமணியம் இலங்கையில் வசித்து வந்துள்ளார்.
பிரபாகரனின் மரணம் பற்றி விளக்கும் போது, ஏன் அது பிரபாகரன் போன்ற புகைப்படத்தை பொதுமக்களுக்கு காட்டியிருக்க முடியாது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று பலர் கூறுவதனை போன்று பிரபாகரன் தனக்கு தானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரிழப்பதற்கான எந்த விதமான வாய்ப்புகளும் இல்லை.
அவ்வாறான நிலையில் இருந்திருந்தால் ஒரு முறையான கைரேகை அல்லது மரபணு பரிசோதனை இருந்திருக்கும்.
பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தொடர்பில் இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தம் காரணமாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூலம் சட்டமா அதிபரினால் வெறும் அறிக்கை ஒன்றே வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது வெறும் அறிக்கை மாத்திரமே, இந்தியாவிற்கு கொடுக்கப்பட்ட மரண சான்றிதழ் அல்ல பிரபாகரன் இறந்திருக்கலாம் என ‘ஊகிக்கப்படும்’ சான்றிதழே வழங்கப்பட்டன.
கொழும்பு மேல் நீதிமன்றம் ஊடாக சட்டமா அதிபர் பிரபாகரன் இறந்துவிட்டதாக ஊகிக்கப்படுகின்றதென அறிக்கை வெளியிட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே 17 அன்று நந்திக்கடல் முள்ளிவாய்க்காலில் ஈழப் போர் கடைசி நாளில் கொல்லப்பட்டுள்ளார் என்று கருதப்படடுகின்றது.
அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள இல்லை என்பதனால் அவர் இறந்திருக்க கூடும் எனவும் இது தொடர்பிலான வழக்குகள் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிகாரபூர்வமாக பிரபாகரனின் மரணம் மே மாதம் 19ஆம் திகதி அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பிரபாகரனின் பெயர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பட்டியலில் இருந்து அழிக்கப்பட வேண்டும் என்று இந்தியா, இலங்கையிடம் ஒரு மரண சான்றிதழ் கேட்ட பின்னர் பிரபாகரனின் மரண அறிக்கை இந்தியாவுக்கு வழங்கப்பட்டது என்று கூறினார்.
இலங்கையினால் பெறப்பட்ட பிரபாகரனின் மரபணு அவர் இன்னும் இருக்கிறார் என்பதனை உறுதிப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதற்கான பரிசோதனை வசதிகள் கூட இலங்கையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
நாங்கள் கேட்ட போது பிரபாகரனின் உடலில் இருந்து இராணுவத்தினர் மாதிரிகள் எடுத்ததனை பொது மக்கள் பார்த்தார்கள், பின்னர் அது பிரபாகரன் தான் என உறுதி செய்தார்கள், இந்தியா அந்த மரபணுக்களை மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கு இலங்கையிடம் கோரிய போது இலங்கை அதனை வழங்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இந்தியா மரபணு பரிசோதனைகளை செய்யவில்லை என்றால் யார் அதனை செய்திருப்பார்கள் , எந்தப் பரிசோதனை கூடத்தில் செய்யப்பட்டிருக்கும்? “ஏன் கைரேகை மற்றும் மரபணு பரிசோதனை முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பிரபாகரனின் மரணத்திற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை, அத்துடன் மரணித்ததற்கான சான்றிதழ்களும் இல்லை.
இந்த உண்மைகள் அது பிரபாகரனின் உடலாக இல்லாமல் இருப்பதற்கு காரணமாகவுள்ளது.
அவர் போர் முடிவுக்கு முன்பு இந்த தாக்குதல்களினால் கொல்லப்படுவதற்கான எந்த தடயமும் அவரது உடம்பில் இல்லை. எனினும், பொதுமக்களை சமாதானப்படுத்த அவர்கள் தோற்றமுடைய மற்றொரு மனிதனின் உடல் காட்டப்பட்டுள்ளதாக பேராசிரியர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியா பிரபாகரனின் மரண அறிக்கையில் திருப்தியடைகின்றதா என அவரிடம் வினவிய போது, பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை எதிர்நோக்க வேண்டும் என்பதனால் இந்தியா இனி அதை பற்றி கவலைப்படவில்லை என கூறினார்.
இதேவேளை, பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் இறுதி யுத்தத்தின் ஒரு சில நாட்களுக்கு முன்னர் இலங்கை படையினரால் வெள்ளை வானில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்றும் குறிப்பிட்ட அவர்,
மீண்டும் பெரும் குழப்பம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படைவதனால் இன்று யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழீழம் வருவதனை யாரும் விரும்பவில்லை. ஈழம் வேண்டும் என விரும்புபவர்கள் இலங்கைக்கு வெளியில் வாழும் மக்கள், என அவர் வலியுறுத்தினார்.
இலங்கை விவகாரங்கள் குறித்து பேசினால், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவுக்கு இலங்கை குறித்து ஆர்வம் இல்லை எனபதனால் தமிழர்களை புலம் பெயர்ந்தோர் பகுதியில் இந்தியா அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் சமாதானப்படுத்தினோம்.
அவர்கள் தங்கள் நாட்டின் ஒரு சிறந்த சேவையை விரும்பினால், இந்தியா நல்ல மற்றும் கெட்ட நேரங்களிலும் இலங்கையுடன் இருக்க வேண்டுமென்றால் உலகின் அனைத்து மூலைகளிலும் வாழும் தமிழ் பேசும் இலங்கை புலம்பெயர் மக்கள் இந்தியாவுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழ் மக்கள் நீண்ட காலமாக தமிழ்நாட்டு அடையாளம் கொண்டிருந்தார்கள் என்றால் அங்கு நீண்டு செயற்பட முடியும்.
செய்கையிலும் எண்ணங்களிலும், நாட்டுப் பற்றுடைய ஒரு உண்மையான இந்தியரான பேராசிரியர் சுப்ரமணியம் மூன்று தலைமுறைகளாக இந்தியப் பாதுகாப்புப் படையில் பல திறமைகளை கொண்ட தளபதி, அட்மிரலாக பணியாற்றியுள்ளார்.
நீங்கள் புலிகள் தோற்கடிப்பட்டதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள் என வினவிய போது, தமிழ்நாட்டில் பல மக்களுக்கு பிரபாகரன் ஒரு நல்ல மனிதர் என்று தெரியும் என்றாலும், பின்னர் நெடுமாறன், வைகோ போன்ற நபர்களை நம்பியிருந்தார்.
இந்திய அரசாங்கம் அவரை சரணடையமாறும் ஆயுதங்களை திருப்பித் தருமாறும் கேட்டுக்கொண்டது, அவர்கள் யுத்தத்தை தொடருமாறு அறிவுரை வழங்கினார்கள் இதுவே பிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘வரலாற்றின் விபத்துக்கள்’ போன்று வைகோ, நெடுமாறன், சீமான், ஆகியோரின் பேச்சினை கேட்டமையினால் பிரபாகரன் போரில் தோல்வியடைந்து விட்டார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மட்டுமே இலங்கை தேசிய பிரச்சினைக்கு அரசியல் அரங்கில் ஒரு தீர்வை கொண்டு வர முடியும் என நம்பினார்.
றோவினால் விரிகுடாவில் சிங்களவர்களை வைக்க முடியாதென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்வியை குறிப்பிட்டு அதற்கு றோவின் நேரடி பங்களிப்பு இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இலங்கை, ஒரு மிக முக்கியமான சமூகம், ஆனால் என்ன நடந்தது, நீங்கள் வந்து கேட்டால், நாம் என்ன செய்ய முடியும், என்னால் ஆலோசனைகள் மாத்திரமே வழங்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் இலங்கை அரசியல்வாதிகள் யாராவது இந்தியாவில் பணம் பதுக்கியுள்ளனரா எனக் கேட்டபோது, அவர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை நம்பவில்லை ஏனெனில் சில அரசியல்வாதிகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையை குறிப்பிட்டவர் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் தமிழர் பிரச்சினையை தீர்க்க முடியாது என்றும் அதுவே எதிர்வரும் ஆண்டுகளில் வாக்கெடுப்பு செல்ல நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கூட்டாட்சி அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமா என அவரிடம் வினவிய போது, அது வருவதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வருந்தத்தக்க காரணிகள் உள்ளன. அவர்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட்டது.
மத்திய கிழக்கில் இருந்து வந்த அந்நிய செலாவணிகள் பெரும் பகுதியை செலுத்தியது, இலங்கை அதன் கடன் திரும்ப செலுத்த வேண்டும்.
இலங்கை 46 வெளிநாட்டு கடன்களை அடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணையினை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, உள்ளூர் விசாரணை செயல்படுத்த இந்தியா ஐ.நா மற்றும் அமெரிக்காவுடன் கைகோர்த்து செயற்பட வேண்டும் என சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மேலும் ஐ.நா பதிவுகளை அடிப்படையாக செய்யப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே இவ்விடயம் தொடர்பான விரிவான ஆய்வு செய்துள்ளது. அமெரிக்காவும் இவ்விடயம் சம்பந்தமாக மூன்று ஆய்வுகளை செய்துள்ளது. மேலும் ஐ.நா பொதுச் செயலாளர் இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பில் ஒரு தனி ஆய்வில் ஈடுப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் யுத்தக்குற்றம் தொடர்பில் உள்ளூர் விசாரணை மற்றும் வழக்கு மிக பொருத்தமானது என பேராசிரியர் சுப்ரமணியம தெரிவித்துள்ளார்.
ஆதாரங்கள் இலங்கையில் இருக்கின்ற நிலையில் உள்ளுர் விசாரணையொன்றின் ஊடாகவே இதனை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில் உள்ளூர் ஆதாரங்கள் விசாரணைக்கு பொருந்துமா என கேட்டப்பொழுது, 20 சதவீதம் பொருந்தாமல் போனாலும், 70 சதவீதம் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
ஐ.நா வின் மேற்பார்வையின் கீழ் நடைபெற இருக்கின்றமையால் நம்பகமான முறையில் விசாரணைகளை நடாத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையால் விசாரணைக்கு எதிராக நிற்க முடியாது. ஐ. நாவின் விசாரணைக்கு ஏற்ப படிப்படியாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஐ.நா. சட்டசபை பாதுகாப்பு பிரிவின் பிரகாரம் ஐ.நா. சட்டத்தின் கீழ் நபர் எவரும் இதில் தலையிட முடியும்.
இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதனை தான் விரும்புவதாகவும் பேராசிரியர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை தொடர்பான இப்பிரச்சினையில் இந்தியாவும் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு தீர்வாக கூட்டாட்சி முறையினை அறிமுகப்படுத்துவதும், அதேவேளை அனைவரும் இலங்கை அரசியலில் முன்னேற்றம் ஏற்படுவதனை காணக் காத்திருப்பதாகவும் கூறினார்.
சீனாவில் இருந்து 10 பில்லியன் டொலர்கள் நிலுவையில் உள்ளது. மேலும் ஈரானுக்கு எண்ணெய் கடன் இருக்கின்றது.
ஊடகவியலாளர் லசந்த கொலை செய்யப்பட்டதற்கான உண்மை, அரசியல் கடத்தல்கள் மற்றும் காணாமல் போனமை தொடர்பான உண்மைகள் வெளிவரும் எனவும் கூறினார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையின் பொறுப்பு மிக்க செயற்பாடுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
இதனை இலங்கை அரசாங்கம் சரியாக மேற்கொள்ள தவறும் பட்சத்தில் பல தடைகளை இலங்கை அரசாங்கம் எதிர்நோக்க வேண்டி வரும்.
இவ்விவகாரம் தொடர்பில் ஏற்ப்படுத்தப்படும் சிறப்பான அரசியல் நல்லிணக்கமே பொருத்தமானதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
இருப்பினும் இலங்கை மலையக தமிழர்களும் வாக்குரிமையினை இழக்கத் தொடங்கினார்கள். இவர்களுக்காக வடக்கு மக்களும் ஆதரிக்க தொடங்கினார்கள்.
இது தொடர்பில் செல்வநாயகம் மலையக மக்கள் வாக்குரிமையினை பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை என கூறினார்.
இவ்வாறாக இலங்கையில் அமைதி மற்றும் அபிவிருத்தி ஏற்படும் வகையில் ஒரு தீர்வு கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.
இது தொடர்பில் தமிழ்நாடு பேராசிரியர் கூறும் பொழுது, இன்னும் ஆறு வருடங்களில் மாற்றம் ஏற்படும். அரசாங்கம் தொடர்ந்து இதனை முன்னெடுத்து செல்ல வேண்டும் சில வேளை தோற்றுப்போனால் மறுபடியும் பத்து ஆண்டுகளில் போர்க்குணம் வளர்ந்து விடும்.
போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் தற்போது வளர்ந்து வருகின்றன. இந்நிலையில் அரசியல் மற்றும் சமூகவியல் பழிவாங்கள்கள் இருக்க முடியும்.
இருப்பினும் இலங்கை தேசிய பிரச்சினை மிக முக்கியமானது எனக் கூறினார். தமிழர்களுக்கு, இன்னமும் தாங்கள் சொந்த நாடு எது என்று தெரியாது. தமிழீழ இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவை நம்புகின்றது. ஆனால் அமெரிக்கா இவர்களின் அழு குரலை கேட்கப்போவதில்லை.
அவர் தமிழ்நாட்டிற்கு வருமாறு புலம்பெயர் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
யாரும் வந்து போராட இந்தியா மிகவும் பெரியதாக உள்ளது. அடையாளம் மூலம் தமிழர்களின் இந்தியர்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com
மாமா ..அனால் முன்னைய செய்தியை நாங்கள் நம்பிட்டோம் ..சும்மா பிலிம் காட்டவேண்டாம்…புலி தலைவர் சித்திரவதை செயப்பாட்டு கொல்லபட்டார் என்று ஒரு நேரில் பார்த்த மீன் அடித்து சொல்லிவிட்டது கூடவே கொச்சின் ..கதையையும் நம்பிட்டோம் ஹி ஹி ஹி…..
ஆமாம் ஆமாம் !!!! இது உண்மையிலேயே உண்மையான செய்தி!!!! நம்புங்கள் மக்களே நம்புங்கள்!!! கேரளா கொல்லம் மலையாளி திருவேங்கடம் வேலுப்பிலை பிரபாகரன் முல்லைத்தீவு காட்டுக்குள்ளே 20,000 போராளிகளுடன் நிலத்தடி சுரங்கத்தில் பதுங்கி உள்ளார்!!! தங்க சமயம் வரும் போது அதிரடி தாக்குதல் நடத்தி முழு இலங்கையையுமே கைப்பற்றி தமிழ் ஈழமாக புது நாட்டை உருவாக்கி விடுவார்!!!!
-குஞ்சி மயிரை மீன்
இது அவரின் உடல் இல்லை ,,இது வந்து ,இது வந்து ,ம்ம்ம்ம்ம்ம் ,,ஆ ,,செத்துப்போன எங்க பாட்டியின் உடம்பு !