போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்தினருக்காக கருணைச் சபையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய மதகுருமார்களை உள்ளடக்கி இந்த கருணைச் சபை உருவாக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் படையினருக்கு மன்னிப்பு வழங்குவதே இந்த கருணைச் சபை உருவாக்கப்படுவதன் நோக்கமாகும்.
இவ்வாறான ஒரு செயற்பாடு தென்னாபிரிக்காவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினருக்கான சட்ட உதவிகளை செய்து கொடுக்கவும் அரசாங்கம் தனியான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
-http://www.tamilwin.com
ஆக 60 வருடம்களாக காட்டும் நாடகத்தை சிங்களவர்கள் இப்பொது உலகிற்கு காட்ட போகின்றார்கள் ..ஆக இந்த விசாரணை விரைவில் சர்வதேச மட்டத்தில் வரும்