சிரியாவில் ரஷ்ய விமானப் படை தாக்குதல் நடத்தி வருவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக நீண்ட காலமாகவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட பல்வேறு போராட்டக் குழுக்களும் போரில் ஈடுபட்டு வருவதால், லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் ஐஎஸ்-க்கு எதிராக அமெரிக்கா கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலை நடத்திவரும் நிலையில், ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போரால் சிரியா அழிந்து போவதை விரும்பவில்லை என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உள்நாட்டு போரால் சிரியாவின் பெரும் பகுதி பேரழிவுகளை சந்தித்துள்ளது. அந்த நாடு முழுவதும் அழிவதை அமெரிக்கா விரும்பவில்லை.
தற்போது சிரியாவில் ரஷ்ய விமானப் படை தாக்குதல் நடத்தி வருவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறோம்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷ்யா, சவுதி அரேபியா, துருக்கி நாடுகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com