மஹிந்தவின் பரணகம ஆணைக்குழுவும் கலப்பு நீதிமன்ற விசாரணைக்குப் பரிந்துரை: சுமந்திரன் எம்.பி

sumandran-mpபோர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பாகவும், இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகவும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனாலும்,  அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தமிழர்களுக்குச் சாதகமான சில விடயங்கள் உள்ளன. நாம் ஏற்றுக்கொள்ளாத பரணகம ஆணைக்குழுவே போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணையைப் பரிந்துரைத்துள்ளது.

எனவே,  இலங்கை அரசு ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்துள்ளார்.

மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

-http://www.tamilwin.com

TAGS: