பொதுநலவாயம் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னத்துடன் உள்ளக விசாரணை நடைபெறுமாக இருந்தால், அது நாட்டின் அரசியல் அமைப்பை மீறும் செயலாக இருக்கும் என்றும் உள்ளக விசாரணையில் பங்கேற்க வெளிநாட்டு நீதிபதிகள் வருவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றி ணைந்த எதிர்க்கட்சிகளின் மகிந்த அணியின் முக்கியஸ்தரான தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர் பில் விசாரணை நடத்துவது தொடர்பான சில நிபந் தனைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்டிருந்தன.
வன்னியில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர் பில் சர்வதேச விசாரணை அவசியம் என்று தமிழ் மக்கள் வலியுறுத்திய நிலையில், இலங்கை அரசும் அமெரிக்காவும் இணைந்து ஒரு திட்டத்தை தீட்டின.
உள்ளகப் பொறிமுறைக்கு ஈடான விசாரணையை நடத்துவதென்றும் இதில் சர்வதேச நீதிபதிகள் பங் கேற்க முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானம் தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. 2014ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்திய அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக களத்தில் இறங்கி மனித உரிமைகள் பேர வையின் உறுப்பு நாடுகளை தனது தீர்மானத்துக்கு ஆதரவளிக்கச் செய்தது.
அமெரிக்காவின் இந்த முயற்சி வெற்றி அளிக்க வேண்டும் என நேர்த்தி வைத்த தமிழ் மக்கள் ஏராளம்.
இலங்கை மண்ணில் சிறுபான்மை இனம் என்பதற்காக தமிழர்கள் கொல்லப்பட்டு இன அழிப்பு நடந்ததற்கான நீதி, சர்வதேச விசாரணை மூலமாகவே கிடைக்கும் என தமிழ் மக்கள் முழுமையாக நம்பியிருந்தனர். தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு அமெரிக்காவின் முயற்சியும் உரமூட்டியது.
எனினும் 2015ஆம் ஆண்டில் மகிந்த ஆட்சி முற் றுப்பெற்று மைத்திரி-ரணில் ஆட்சிக்கு வந்த போது அமெரிக்காவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
ஆக, போர்க்குற்ற விசாரணை என்பது பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என் பதற்காகவன்றி, இலங்கையின் ஆட்சியில் யார் இருக்கின்றார்களே அவர்களைப் பொறுத்துத்தான் விசாரணை என்பதாக நிலைமை இருந்தமை மிகப் பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.
சரி, இவைதான் நடக்கும் என்பது தெரிந்த விட யம் என்றால், அதற்கும் முன்னைய ஆட்சியில் இருந்தவர்கள் விடுவதாக இல்லை.
உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதி கள் பங்கேற்கக் கூடாது. அவ்வாறு பங்கேற்றால்- அவர்கள் எம்நாட்டுக்குள் வந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வீராப் புக்களும் முழங்கிக் கொள்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதும் இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியது, மின்சாரக் கதிரையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வைக் காப்பாற்றி விட் டேன் என்பதாகும். இதையே ஜனாதிபதி மைத்திரி யும் கூறினார்.
ஆக, உள்ளக விசாரணை மூலம் போர்க்குற்ற வாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது உறுதி யாகின்றது. நிலைமை இவ்வாறாக இருக்க, வெளி நாட்டு நீதிபதிகளின் வருகையை தினேஸ் குணவர்த் தன போன்றவர்கள் எதிர்த்தால் அதன் விளைவு வெளிநாட்டுப் படைகள் இங்கு வரவேண்டியதாக இருக்கும்.
-வலம்புரி