இன்று மூவர் செனட்டர்களாகப் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்களில் மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தலைவர் எஸ் நல்ல கருப்பனும் ஒருவர் ஆவார்.
தெஸ் இன்னவேஷன்ஸ் சென் பெர்ஹாட் இயக்குநர் ஜாஸ்பால் சிங், சிஎல்கே ஆலோசகர் நிறுவன இயக்குநர் சியூ லியான் கெங் ஆகியோர் மற்ற இருவர் ஆவர்.
65 வயதான நல்ல கருப்பன், 49 வயதான ஜாஸ்பால் சிங், 47 வயதான சியூ ஆகியோர் நாடாளுமன்றக் கட்டிடத்தில் தேவான் நெகாரா தலைவர் அபு ஸாஹார் உஜாங் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அவர்களுடைய நியமனங்களுக்கு யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு மிஸான் ஜைனல் அபிடின் இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜாஸ்பால் மஇகா பொருளாளராகவும் சியூ கூட்டரசுப் பிரதேச மசீச இளைஞர் பிரிவுத் தலைவராகவும் உள்ளனர்.