வட கொரியா ராஜ்ஜியத்தின் முடிவு நெருங்குகிறதா? ரகசிய தகவல்களை அம்பலப்படுத்திய புலனாய்வு துறை

kimg_yang_001வட கொரிய சர்வாதிகாரியான கிம்-யாங்-அன்னின் கொடுங்கோள் ஆட்சி முறை முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதாக சில ஆதாரங்களை சுட்டிக்காட்டி அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிம்-யாங்-அன்னின் தந்தையான Kim Jong-il கடந்த 2011ம் ஆண்டில் மரணமடைந்ததை தொடர்ந்து, கிம்-யாங் உடனடியாக ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

பதவி ஏற்றதுடன் வெளிநாட்டினர் மட்டுமின்றி, உள்நாட்டு குடிமக்களும் அஞ்சும்படி கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருகிறார்.

தனக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரது மாமனாரான Jang Song-taek என்பவரையும், தன்னுடைய ராணுவ தளபதியான Hyon Yong-chol என்பவர் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு கொடூரமாக மரண தண்டனை விதித்தது சக அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை எற்படுத்தி வந்துள்ளது.

கிம்மின் ஆட்சி முறை பிடிக்காததால், 2013ம் ஆண்டில் 8 உயர் அரசாங்க அதிகாரிகள் வட கொரியாவை விட்டு தென் கொரியாவிற்கு தப்பி அடைக்கலம் புகுந்தனர்.

இந்த எண்ணிக்கையானது 2014ல் 18 ஆக அதிகரித்து, 2015 அக்டோபர் மாதம் வரை 20 அரசாங்க உயர் அதிகாரிகள் வட கொரியாவின் எதிரி நாடான தென் கொரியாவில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

அரசாங்க பணியாக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால், கிம்மின் நம்பிக்கைக்கு உகுந்த உயர் அதிகாரிகள் மட்டுமே வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

இதுபோன்ற ஒரு சூழலில் தான், வெளிநாடுகளுக்கு சென்ற 20 உயர் அதிகாரிகள் தாய்நாட்டிற்கு திரும்பாமல் தென் கொரியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேல் கூறிய இந்த உயர் அதிகாரிகள் அனைவரும் வட கொரியா நாட்டின் நாணயம் மற்றும் பொருளாதார மதிப்பினை உயர்த்த பாடுப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், வடகொரியா உருவாக காரணமாக இருந்த Kim Il-sung என்பவருக்கு மக்களின் மத்தியில் 100 சதவிகிதம் செல்வாக்கு இருந்தது.

இவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அவருடைய மகனான Kim Jong-il என்பவருக்கு 50-70 சதவிகிதமாக செல்வாக்கு குறைந்து, இவருடைய மகனான கிம்மின் ஆட்சியில் மக்கள் செல்வாக்கு 10 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இதன் மூலம், வட கொரியா குடிமக்களுக்கு கிம் மீதான விசுவாசம் குறைந்து, பணத்தின் மீதான விசுவாசம் அதிகரித்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த காரணங்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, கிம்-யாங் ராஜ்ஜியத்தில் விரிசல்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த விரிசல்கள் பேராபத்தாக அதிகரிக்கும் காலம் நெருங்கிவிட்டதாக ரகசிய புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com