கெலி என்னும் 42 வயது பெண்ணை ஒரு லாரி ஓட்டுனர் தனது வாகனத்தால் அடித்து , சுமார் 30 மீட்டர் தூரம்வரை இழுத்துச் சென்றுள்ளார். தான் ஒரு பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டோம் என்று கூட அவர் நினைக்கவில்லை. உடனே தனது வாகனத்தை நிறுத்தாமல் அப்படியே தப்பிச் சென்றுவிட்டார். எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனத்தில் இருந்த கெலியின் வளர்ப்பு நாய், பாய்ந்து வந்து கெலி இறந்து கிடந்த அதே நடு வீதியில் தானும் படுத்து இருந்துள்ளது. குறித்த வீதியில் பல வாகனங்கள் சென்றும் அது எழுந்து செல்லவில்லை. இதனை அவதானித்த சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் உடனே விரைந்து சென்று உடலை மீட்டுள்ளார்கள்.
ஆனால் தனது எஜமானியான கெலி இறந்து கிடந்த இடத்தை விட்டு இந்த நாய் நகர மறுத்துவிட்டது. அதே இடத்தில் அது தொடர்ந்து படுத்திருந்ததால் அனைவரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது. இறுதியாக பொலிசார் ஒரு பக்க சாலையை மறிக்கவேண்டிய நிலைக்கு நிலமை சென்றுள்ளது. குறித்த அந்த நாயின் நன்றி உணர்வுக்கு தாம் மதிப்பு கொடுப்பதாக அமெரிக்காவின் புளொறிடா மாநிலப் பொலிசார் கூறியுள்ளார்கள். இது போக கெலியை இவ்வாறு இடித்துக் கொன்றது யார் என்று தெரியவில்லை என்று பொலிசார் கூறியுள்ளார்கள்.
ஆனால் குறித்த நாய் ஒருவேளை அந்த வாகனத்தை காட்டிக் கொடுக்கலாம் என்று பொலிசார் கருதுகிறார்கள்.
-http://www.athirvu.com