இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ரொபர்ட் ஒ பிளேக் முக்கிய பங்கு வகித்தார் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
மஹிந்த அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென பிளேக் முன்னதாக விரும்பினார்.
எனினும் மஹிந்த அரசாங்கம் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கு பொய்யுரைத்ததனை புரிந்து கொண்டார்.
எனவே அதன் பின்னர் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதில் பிளேக் மிக முக்கியமான பங்கினை வகித்துள்ளார்.
வெள்ளைக்கொடி ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை ஓர் வரலாற்றுத் தவறாகும்.
மெய்யாகவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாக காணப்பட்டது.
புலிகளை கொன்றொழிக்காது குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் புலிகளிடமும் கேள்வி எழுப்பப்பட்டிருக்க வேண்டும். எனினும் மஹிந்த அரசாங்கம் மேற்கொண்ட தவறினால் இந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டையும் விசாரணைக்கு உட்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. பக்கச்சார்பாக தமது நிறுவனம் செயற்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
ஒவ்வொரு தரப்பினரும் மேற்கொள்ளும் பிழைகளை சுட்டிக் காட்டும் போது அரசாங்கமும் புலிகளும் தம்மை பக்கச்சார்பானவர்கள் குற்றம் சுமத்தியதாக பிரட் அடம்ஸ் கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com


























இதெல்லாம் சிங்களவர்களுக்கு விளங்காது ….