எண்ணெய் விற்பனை மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து வருவாய்

isis-india2அமெரிக்கக் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வந்தாலும், எண்ணெய் விற்பனை மூலம் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மாதத்துக்கு 5 கோடி டாலர் (ரூ. 324 கோடி) வருவாய் ஈட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து இராக் உளவு அமைப்புகளும், அமெரிக்க அதிகாரிகளும் கூறுவதாவது:

இராக்கிலும், சிரியாவிலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து பிற நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்வதன் மூலம்தான் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களுக்குத் தேவையான நிதியை பெருமளவில் திரட்டி வருகின்றனர்.

அந்த நிதியைக் கொண்டுதான், அவர்கள் “மதப் பேரரசு’ எனக் கூறிக் கொள்ளும் ஆக்கிரமிப்புப் பகுதிகளை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துள்ளனர்.

எண்ணெய் விற்பனை மூலம் ஏராளமான நிதி தொடர்ந்து கிடைத்து வருவதால் உள்கட்டமைப்பைப் பெருக்கவும், படையினருக்கு அதிக ஊதியம் அளித்து அவர்களைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் அந்த பயங்கரவாத அமைப்பால் முடிகிறது.

இதன் காரணமாகவே எதிரிகளின் தரைப்படைத் தாக்குதலையும், ஓராண்டுக்கு மேலான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தாக்குப் பிடிக்க முடிகிறது.

வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களையும், அதி நவீன சாதனங்களையும் தருவித்து ஆக்கிரமிப்புப் பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

-http://www.dinamani.com