ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரையிலும் 300 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள சார்ம் நகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள இந்து குஷ் மலைத்தொடரில் 7.5 என்ற ரிக்டர் அலகில் நேற்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்துக்கு ஆப்கானிஸ்தானில் 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதேபோல பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் 300 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் நிலச்சரிவினால் மலைப்பகுதிகளில் போக்குவரத்தும், தொலைதொடர்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீட்புப்படையினர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒதுக்குபுறமான இடங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அவசர உதவி பொருட்கள் வழங்க உதவி அமைப்புகள் தயங்க வேண்டாம் என்றும், தமது அமைப்பை சேர்ந்தவர்களும் உதவி பணிகளில் ஈடுபட தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com