8ம் நூற்றாண்டு முதல் உலகளவில் நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கங்களும், அதன் விளைவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் புள்ளிவிபரங்களை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
உலகளவில் பூகம்பத்திற்கு அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சீனா நாட்டில் தான். குறிப்பாக, பூகம்பத்திற்கு அதிக அளவில் பொருளாதார சீரழிவை சந்தித்த நாடும் சீனா தான்.
1.சான்சி, சீனா (சனவரி 23, 1556)
வரலாற்றில் பதியப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், கடந்த 1556ம் ஆண்டு சனவரி மாதம் 23ம் திகதி சீனாவில் உள்ள சான்சி மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பமே உலகின் மிக மோசமான பூகம்பமாக பார்க்கப்படுகிறது.
ரிக்டார் அலகு கோளில் 8 என்ற அளவில் பதிவான இந்த பூகம்பம் நகர் முழுவதும் சுமார் 270 மைல்களுக்கு பரவியதால், சுமார் 8 லட்சத்து 30 ஆயிரம் பேர் கொடூரமாக உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பானது சான்சி மாகாணத்தில் வசித்த மக்கள் தொகையில் 60 சதவிகிதமாகும்.
இந்த மோசமான பூகம்பம் 97 நாடுகளிலும் உணரப்பட்டது என்றால், அதன் தாக்கத்தை புரிந்துக்கொள்ளலாம். லட்சக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்ததால், அதனை சீர்ப்படுத்த பல பில்லியன் டொலர்கள் தேவைப்பட்டது.
2.டாங்சான், சீனா (யூலை 27, 1976)
வரலாற்றில் இரண்டாவதாக பூகம்பத்திற்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடும் சீனா தான். 1976ம் ஆண்டு யூலை 27ம் திகதி டாங்சான் நகரில் ஏற்பட்ட பூகம்பம் 8.2 என்ற அளவில் ரிக்டல் அலகு கோளில் பதிவானது.
சுமார் 10 வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த பூகம்பம் 2 லட்சத்து 55 ஆயிரம் பேரை பலிவாங்கியது. (ஆனால், அரசு 6 லட்சம் வரை உயிரிழப்பு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளது.) சுமார் 4 மைல் நீளத்திற்கு பரவிய இந்த பூகம்பத்தால் ஒரு பில்லியன் டொலர் அளவிற்கு சேதாராம் ஏற்பட்டது.
3.ஹையுவான், சீனா (டிசம்பர் 16, 1920)
துரதிஷ்டவசமாக பூகம்பத்தால் அதிக உயிரிழப்பை சீனா நாடு மூன்றாவதாக சந்தித்துள்ளது. ஹையுவான் நகரில் கடந்த டிசம்பர் 16, 1920ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அலகு கோளில் 7.8 மற்றும் 8.5 என்ற அளவில் பதிவானது.
இந்த கொடூரமான பூகம்பத்திற்கு நகர் முழுவதும் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் வரை உயிரிழந்தனர்.
4.அலேப்போ, சிரியா (ஆகஸ்ட் 9, 1138)
சிரியாவில் உள்ள அலேப்போ நகரில் 1138ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் திகதி ஏற்பட்ட இந்த பூகம்பம் உலகின் மிக மோசமான 4வது பூகம்பமாக பார்க்கப்படுகிறது. ரிக்டர் அலகு கோளில் 8.5 என்ற அளவில் பதிவான இந்த பூகம்பம் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரை பலிவாங்கியது. இந்த பூகம்பத்தில் எண்ணற்ற வரலாற்று சிறப்புமிக்க நினைவிடங்களும் முற்றிலுமாக அழிந்துபோனது.
5.சுமத்ரா, இந்தோனேஷியா (டிசம்பர் 26, 2004)
இந்திய பெருங்கடலில் 9.1 முதல் 9.3 வரை ரிக்டர் அலகு கோளில் பதிவான பூகம்பத்தால் சுனாமியை ஏற்படுத்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த சுனாமி அருகில் உள்ள மாலத்தீவு மற்றும் தாய்லாந்து நாடுகளையும் தாக்கியது. சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பேரை பலிவாங்கிய இந்த பூகம்பம் 7 பில்லியன் டொலர் சேதாரத்தை ஏற்படுத்தியது.
6.போர்ட்-அவ் பிரின்ஸ், ஹைதி (சனவரி 12, 2010)
2010ம் ஆண்டு சனவரி 12ம் திகதி ஹைதியில்(Haiti) உள்ள போர்-அவ் பிரின்ஸ் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அலகு கோளில் 7.0 என்ற அளவில் பதிவாகியது. ஆனால், இந்த பூகம்பத்திற்கு அடுத்தடுத்து நிகழ்ந்த 52 நில அதிர்வுகளில் சிக்கி சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் பலியாயினர். ஆனால், அரசு 3 லட்சம் பேர் பலியானதாக ஆரம்பத்தில் பதிவு செய்திருந்தது.
7.டாம்கன், ஈரான் (டிசம்பர் 22, 856)
கடந்த 856ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி டாம்கன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அலகு கோளில் 8.0 என்ற அளவில் பதிவானது. சுமார் 200 மைல் தொலைவு வரை பரவிய இந்த பூகம்பம் சுமார் 2 லட்சம் பேரை பலி வாங்கியது.
8.ஆஸ்காபாத், சோவியத் யூனியன் (அக்டோபர் 6, 1948)
சோவியத் யூனியன் எனப்படும் தற்போதைய ரஷ்யாவில் உள்ள ஆஸ்காபாத் என்ற நகரில் கடந்த 1948ம் ஆண்டு அக்டோபர் 6ம் திகதி ரிக்டர் அலகில் 7.3 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது.
இதே நேரத்தில், சோவியத் யூனியன் முதன் முதலில் பரிசோதனை செய்த அணுகுண்டு சோதனையின் விளைவாகவே இந்த பூகம்பம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த பூகம்பத்திற்கு நகர் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேர் பலியாகினர்.
9.டொகுக்கு, ஜப்பான் (மார்ச்11, 2011)
அமெரிக்காவின் இரண்டு அணு குண்டுகளை எதிர்கொள்வதற்கு முன்னதாகவே ஜப்பான் ஒரு பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்தை எதிர்க்கொண்டு பெரும் உயிரிழப்பிற்கு உள்ளானது. டொகுக்கு நகரில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி 9.0 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்திற்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியானதுடன் 4 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் நாசமானது.
10.ஆஸ்காபாத், துர்க்மெனிஸ்தான் (அக்டோபர் 5, 1948)
சோவியத் யூனியனிலிருந்து பிறந்த பிறகு ஆஸ்காபாத் நகரில் கடந்த 1948ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதி 7.3 என்ற அலகில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் அருகே உள்ள ஈரான் நாட்டிலும் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த பூகம்பத்தில் பலியாயினர்.
-http://world.lankasri.com