அணு வடிவில் ஆராய்ச்சி கூடம்: உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வட கொரியா

atom_ko_001வட கொரியாவில் அணு ஆயுத வடிவில் கட்டப்பட்டுள்ள புதிய அறிவியல் கூடத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் பார்வையிட்டார்.

வட கொரியா பல ஆண்டுகளாக அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.இதற்கு பல்வேறு மேற்கத்திய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதன் காரணமாக அணு ஆராய்ச்சியை வட கொரியா ரகசியமாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் Pyongyang தீவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையத்தை வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் பார்வையிட்டார்.

மேலும் அங்குள்ள விஞ்ஞானிகளை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூகம்பத்தை உணரும் வசதி, அதி நவீன கணணிகள் மற்றும் ஏராளமான வசதிகள் அடங்கிய இந்த மையத்தின் மத்திய கட்டிடம் அணு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அணு ஆராய்ச்சி தொடர்பான கனவினை அந்நாடு கைவிடவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆராய்ச்சி மையத்தினுள் எது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யவுள்ளனர் என்பதை பற்றி அறிந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

-http://world.lankasri.com