எத்தகைய சவாலையும் ஏற்கும் திறன் உள்ளது: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

uss_larcene_001தென் சீனக்கடற்பகுதியில் அமைந்துள்ள ஸ்பார்டி தீவுகளை சீனா கொண்டாடி வருவதற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளது.

ஸ்பார்டி தீவுப் பகுதியை சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இதனால், பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடு களுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது. இந்த வகையில் ஆசிய பசிபிக் நாடுகளை சீனாவுக்கு எதிராக அமெரிக்கா திருப்பி வருகிறது.

இந்நிலையில் இந்த தீவுக்கு 12 கடல் மைல் தொலைவில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் லாசன் போர்க்கப்பல் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டது.

அந்த கடல் பரப்பு தங்கள் எல்லை என்று கூறியுள்ள சீன அரசு, அமெரிக்க போர்க்கப்பல் அங்கு ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லூ காங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, அமெரிக்க கடற்படை தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் திறன் சீன ராணுவத்துக்கு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த குற்றச்சாட்டை அமெரிக்க கடற்படை மறுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியபோது, சர்வ தேச கடல் எல்லையில்தான் அமெரிக்க போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. சம்பந்தப் பட்ட ஸ்பார்ட்டி தீவுகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று தெரிவித்தன.

-http://world.lankasri.com