அம்னோவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து முகைதின் யாசினை அகற்றக் கட்சிக்குள் திட்டமிடப்படவில்லை என உச்சமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் திட்டவட்டமாகக் கூறினார்.
“துணைத் தலைவரைக் கவிழ்க்கும் திட்டம் இருப்பது எனக்குத் தெரியாது என்பதை உச்சமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் பெர்லிஸ் அம்னோ தலைவர் என்ற முறையிலும் கூறிக்கொள்கிறேன்”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
முகைதினை வெளியேற்ற தொகுதித் தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கூறியிருந்தார்.
ஜமாலிடம் அதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை அவர் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரிடம் வழங்க வேண்டும் என ஷஹிடான் கூறினார்.