பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மசீச முன்னாள் தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக்மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
நஜிப் பொதுமக்கள் பணத்தை எடுத்துக் கொண்டார் என்று சொன்னதற்காக லிங்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மலேசியாகினியிடம் பேசிய நஜிப்பின் வழக்குரைஞர் ஹவாரிசாம் ஹருன் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
எந்த நீதிபதியிடம் வழக்கு விசாரணைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தாகி விட்டதா?
ஊழல் தஸ்தாவேதுக்களை எல்லாம் வெளியே கொண்டு வர மாமக்தீருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கு. தற்காப்புக்கு முதல் சாட்சி முந்நாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் அழைக்கப் படுவார் என்பதை நம்பலாம்.
குறள் 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
வாழ்க நாராயண நாமம்.
லிங் : நஜிப் பொதுமக்கள் பணத்தை எடுத்து கொண்டார் !
நஜிப் : எனது தலைமையில் இயங்கும் அரசாங்கம் உதவி தொகை என்ற பெயரில் மக்களுக்கு வழங்கப்படும் லஞ்சம் அல்லது கையூட்டு அதாவது “BR1M”-க்கு, இன்றுவரை மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலாக, “BR1M”-க்கான தொகையை உயர்த்துங்கள் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இதன் மூலம்,. எனது ஆட்சியில் “ஊழல், லஞ்சம்” இவை இரண்டையும் “வாழ்க்கை முறை” என்று மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க பட்டுள்ளது. ஆகவே, நான் எடுத்து கொண்ட பணம் பொதுமக்கள் பணமாகவோ, ஊழலாகவோ அல்லது லஞ்சமாகவோ இருந்தாலும் தப்பில்லை. நான் செய்தது தவறு என்று இந்த நீதிமன்றம் கருதுமானால் தண்டனையை ஏற்றுகொள்ள நான் தயார், அதற்கு முன் எனது அரசாங்கம் மூலம் “BR1M” என்ற உதவி தொகை அல்லது லஞ்சத்தை பெற்று எனக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மக்களுக்கு முதலில் இந்த நீதிமன்றம் தண்டனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
மக்கள் : வைச்சாண்டா “1 MALAYSIA” ஆப்பு !
நீதிபதி : ???