வெள்ளைக் கொடியுடன் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் சரணடைந்த விவகாரம் பொய் என்று அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் கூறியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் இராணுவ அதிகாரியாக கடமையாற்றிய லோரன்ஸ் ஸ்மித் என்பவர், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைய முற்பட்டமை நம்ப முடியாத விவகாரம் என்று கூறியிருந்ததாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளை படுகொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு உத்தரவிட்டமையை செவிமடுத்ததாக கூறியுள்ள ஊடகவியலாளரின் கூற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. ஏனெனில் இவ்வாறான இரகசிய உத்தரவுகளை மொபைல் போன் ஊடாக வழங்கும் சம்பிரதாயம் இராணுவத்தில் இல்லை.
அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக எந்தவிதமான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் கெலம் மெக்ரே, பிரான்சிஸ் ஹரிசன், மாரி கொல்வின் போன்ற விடுதலைப் புலி ஆதரவு ஊடகவியலாளர்களே வெள்ளைக் கொடி விவகாரத்தை உருவாக்கியிருப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com