”ஒரு குடும்பம், ஒரு குழந்தை” திட்டத்தை கைவிட்ட சீனா: முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் நடவடிக்கை

cina_child_001சீனாவில் நீண்ட நாட்களாக அமலில் உள்ள ஒரு குடும்பம், ஒரு குழந்தை திட்டத்தை கைவிட அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் தொகையில் சீனா உலகளவில் முதலிடத்தில் உள்ளது.

எனவே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு அதிகமாக பெற்றுகொள்ளக்கூடாது என்று கடந்த 1979 ஆம் ஆண்டு  சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது அந்நாட்டில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்தும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் காணப்படுகிறது.

எனவே இதை சரி செய்வதற்காக ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற திட்டத்தை கைவிட சீனா முடிவு செய்துள்ளது.

எனவே இரண்டாவது குழந்தையை பெற்றுகொள்ள விரும்பும் தம்பதிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்த ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com