அமெரிக்காவுடன் போருக்கு தயாரான சீனா: அதிகரிக்கும் பதற்றம்

china_uswar_001தென் சீனக் கடலில் அத்துமீறினால் அமெரிக்கா மீது போர் தொடுப்போம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஆசிய பசிபிக் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சமீபத்தில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்பார்ட்டி தீவுக்கு மிக அருகில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். லார்சன் போர்க்கப்பல் கடந்து சென்றது.

இதற்கு சீன தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அது சர்வதேச எல்லை, சீனாவின் கடல் பகுதி இல்லை என்று அமெரிக்கா வாதிட்டு வருகிறது.

இந்தப் பின்னணியில் சீன கடற்படை தலைமை தளபதி அட்மிரல் வூ செங்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்சீன கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அத்து மீறுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மின் ஜான் ரிச்சர்ட்டை கேட்டுக் கொள்கிறேன்.

அமெரிக்க கடற்படை, விமானப் படை தொடர்ந்து அத்துமீறினால் கடல்பரப்பு, வான் வழியாக கடுமையாக தாக்குதல் நடத்துவோம்.

இருநாடுகளும் பரஸ்பரம் மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய சம்பவம்கூட இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ளார்.

-http://world.lankasri.com