ரஷ்ய நாட்டு விமானம் விபத்துக்குளாகியதாக எகிப்து பிரதமர் தெரிவித்துள்ளார். எகிப்தில் இருந்து 212 பயணிகளுடன் ரஷ்யா நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த விமானம், ஷினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
அதனையடுத்து, துருக்கி விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட அந்த விமானம், பத்திரமாக இருப்பதாக மற்றொரு தகவல் வெளியானது.
இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று எகிப்து நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்
விமானம் விபத்துக்குள்ளானதாக எகிப்து நாட்டு பிரதமர் தெரிவித்துள்ள தகவலை ஏஎஃபி செய்தி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
-http://www.dinamani.com


























