வங்கதேசத்தின் தலைநகரமான டாக்காவில், வெளியீட்டாளர்கள் மீது இரண்டு கொடூர தாக்குதல்கள் நடந்துள்ளன.
முன்னர், கொலை செய்யப்பட்ட மதசார்பற்ற பதிவர் அவ்ஜித் ராயின் நெருங்கிய நண்பரும் வெளியீட்டாளருமான அஹ்மெடுர் ரஷித் டுடுலின் அலுவலகத்துக்குள் ஆயுதம் ஏந்திய நபர்கள் புகுந்து அவரையும் மற்றும் இருவரையும் கத்தியால் குத்தினார்கள்.
ஏனைய இருவரில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொரு வெளீயீட்டாளர், பைஸல் அரெபின் திபொன், நகரத்தின் மற்றொரு இடத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
டாக்காவில், ராய் என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் கொலை செய்யப்பட்ட பின்னர் மதசார்பற்றவர்களுக்கு எதிராக வங்கதேசத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் கொலைவெறித்தாக்குதல்களில் இவை புதிதாக நடந்துள்ளன. -BBC