போர்க்குற்றங்களை புலிகளே செய்தனர்! இராணுவத்தினர் போர்க்குற்றம் செய்யவில்லையாம்! டெஸ்மண்ட் சில்வா

deshman_d_shilva_001இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளே ஒன்றுக்குபின் ஒன்றாக பல போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சேர் டெஸ்மண்ட் சில்வா விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டோர் குறித்து இங்கிலாந்து ராணியின் வழக்கறிஞரும், சர்வதேச நீதிக்கட்டமைப்பு ஆலோசகருமான சேர் டெஸ்மண்ட் சில்வா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளே போர்க்குற்றங்களை புரிந்ததாகவும், மனித அவலங்களுக்கு அவர்களே பொறுப்பு என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போர்தவிர்ப்பு வலயத்தினுள் விடுதலைப்புலிகள் பொதுமக்களுடன் சேர்ந்து தமது ஆயுத தளவாடங்களை நகர்த்திச் சென்றது முதலாவது போர்க்குற்ற நடவடிக்கை என்று அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் யுத்தத்தின் கடைசி நாட்களில் விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி அடுத்த போர்க்குற்றத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறத்தில் இலங்கை ராணுவத்தினர் ஓரிருவர் சிறு தவறுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று ஏற்றுக் கொள்ளும் அவர், போர்க்குற்றங்களில் ராணுவத்தினர் ஈடுபடவில்லை என்றும் அடித்துச் சொல்லியிருக்கின்றார்.

அத்துடன் போர்க்குற்ற விடயங்கள் தொடர்பில் அரச ஆதரவு வெளிப்படுத்தப்படவில்லை என்றும் டெஸ்மண்ட் சில்வா தனது அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: