முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள சீனா முழுக்க முழுக்க உள்நாட்டிலே விமானங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக C919 என்ற விமானத்தை தயாரித்துள்ளது. சுமார் 168 பயணிகள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானம் எங்கும் நிற்காமல் 4,075 கிலோமீற்றர் தூரம் பறக்கும் ஆற்றலுடையது.
சீனாவின் ஷாங்காயில் இந்த விமானத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சீன விமான கார்ப்பரேஷனின் தலைவர் Jin Zhuanglong , இது சீனாவின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு தனது முதல் பயணத்தை தொடங்கும் இந்த விமானம் மூன்று ஆண்டுகளுக்கு சோதனை ஓட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது வரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 21 வாடிக்கையாளர்கள் 517 C919 ரக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com