ஜேர்மனிய கிராமத்தில் குவியும் அகதிகள்: சான்சலர் மெர்கலுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

germany_sam_001அகதிகள் விவகாரத்தில் ஜேர்மனியின் சான்சலர் மெர்கல் உள்நாட்டு மக்களின் நலனை பற்றி கவலைப்படுவதில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஐரோப்பியாவிலேயே அதிக அளவு அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நாடாக ஜேர்மனி விளங்கி வருகிறது.

அதே வேளையில் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சல் மெர்கல் உள்ளூர் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியில் உள்ள சம்தி என்ற கிராமத்தில் 750 அகதிகள் தங்கும் விதத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக தற்போது 100 அகதிகள் வந்துள்ளனர்.

இந்நிலையில் . இன்னும் சில நாட்களில் அப்பகுதியில் வசிக்கும் குடிமக்களின் எண்ணிக்கையை விட அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்று அப்பகுதியை சேர்ந்த 102 குடியிருப்புவாசிகளும் அச்சமடைந்துள்ளனர்.

அகதிகளின் வருகையினால் குற்ற நடவடிக்கைகள் அதிகரிக்க கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த கிராமத்தின் கவுன்சிலர் ஹொல்ஜெர் நெய்மென் கூறியதாவது,750 பேர் என்ற இந்த எண்ணிக்கை விரைவில் ஆயிரமாக அதிகரிக்கக்கூடும்.

ஜேர்மனியின் 3 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். 3 லட்சம் மக்கள் வீடுகள் இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் அவர்களை பற்றி சிந்திக்காமல் அகதிகள் நலனில் மட்டுமே சான்சலர் அக்கறை செலுத்துகிறார்.

மேலும் ஜேர்மனிக்கு வருபவர்கள் அனைவரும் அகதிகள் அல்ல. சிரியாவின் போர் சூழலை பயன்படுத்தி ஆப்பிரிக்கா, பால்கன்ஸ் மற்றும் ஆசியாவை சேர்ந்தவர் ஜேர்மனியினுள் அகதிகளை போல் வந்துவிடுகின்றனர்.

அகதிகளில் பெரும்பாலானோர் அகதிகளுக்கு மாத மாதம் கிடைக்கும் 500 யூரோ பணத்தை பெறவே விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார். அப்பகுதியில் நிலவும் அமைதியான சூழல் விரைவில் மாறக்கூடும் என்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com