விமான விபத்து பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டது போலி வீடியோ : ரஷ்யா பதில்

ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டது போலி வீடியோ என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.

எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரிலிருந்து, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு புறப்பட்ட இந்த விமானம் துருக்கி நாட்டின் சைப்ரஸ் மலைகள் மீது பறந்த போது அந்த விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 224 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே ரஷ்ய விமானத்தை ‘நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அண்மையில் அறிவித்திருந்தனர். மேலும் வானில் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியற்கான புதிய வீடியோ ஆதாரத்தை ஐ.எஸ்.அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த வீடியோ போலியானது என்று ரஷ்ய விமானப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது பற்றி அவர்கள் கூறும்போது “ 33 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகனைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கிடையாது. மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் இருப்பது ஏர்பஸ் ரக விமானமே கிடையாது” என்று கூறியுள்ளனர்.

கீழே உள்ள செய்தியை படிக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்…

-http://www.athirvu.com