போரின் பின்னர் அதிகளவு மதுபானம் நுகரப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு 34 வீதத்தில் மதுபான பயன்பாடு அதிகரித்துள்ளது.
போர் காரணமாக அழுத்தங்களை எதிர்நோக்கியமை இதற்கான காரணமாக இருக்கக் கூடும்.
இளைஞர்கள் மதுபானம் அருந்தப் பழகுவது மிகவும் ஆபத்தானதாகும்.
வரி வருமானம் அதிகளவில் கிடைக்கும் காரணத்தினால் மது பயன்பாட்டை தடுப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com
இனி குடி விஷயத்தில் தமிழ் ஈழமும் தமிழ் நாட்டின் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.பிரபாகரனின் மறைவுக்கு முன் இன,மொழி உணர்வோடு கெவரவமாக வாழ்ந்த ஈழத் தமிழன் இப்பொழுது மதுவுக்கு அடிமையாகி. தமிழ் நாட்டுத் தமிழன் வடவனுக்கு அடிமையாகி கிடப்பது போல இங்கு சிங்களவனிடம் அடிமைப் பட்டு கிடைக்கப் போகிறான்.
தமிழ் திரை படங்களில்தான் தமிழ் கலாசாரம் போல் பெருமையுடன் தண்ணி அடிக்கும் மட தமிழர்களை பற்றி என்ன சொல்ல– என்றுதான் நம்மவர்களுக்கு கொஞ்சம் புத்தி வருமோ?
30 வருடங்கள் நடந்த யுத்தம் உடல் ரீதியாக மட்டும் அல்ல உலா ரீதியாகவும் ..இலங்கை முழுவதும் மக்களை பாதித்து உள்ளது ..கூடவே சிங்கள ராணுவம் 5 தமிழருக்கு ஒரு ராணுவம் என்று நிறுத்தி போதை பொருள் …மதுபானம் இவைகளை …தமிழரிடம் பரப்பி வருகின்றது …அரசாங்க துணையுடன் இது நடைபெறுகின்றது ..இதனால் தான் ராணுவம் வட-கிழக்கில் இருந்து விலக்க பட்டு போலிஸ் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்க பட வேண்டம் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது 2009 மே யுடன் இலங்கை முழுவதும் சட்டம் ..ஒழுங்கு தலை கீழ் …அமைதியா இருந்த மலையக தமிழ் மக்கள் மத்தியில் கூட இப்பொது கொலை ..தற்கொலை மிகவும் அதிகரித்து உள்ளது சிங்கள பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம் கடந்த ஆட்சியல் போதை பொருட்கள் container கலீல் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செயப்பட்டது .இன்னும் தொடர்கின்றது