இலங்கையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள நிலையில், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படாது, கைது செய்யப்பட்டு, விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க, சட்டத்தில் இடம் உள்ளது.
கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் அவரால் கைதிகளை விடுவிக்க முடியும். அதனை யாரும் தடுக்க முடியாது என அவர் கூறினார்.
பத்தரமுல்லையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளரொருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com


























Field Marshal பொன்சேகாவின் முகத்தை கூர்ந்து கவனித்தால் ..அப்புராணி களை தெரியும் தமிழர் எதிர்ப்பு உலடல் முழுவதும் பரவியுள்ள இவர் ….ராஜபக்சே அடித்து துவைத்து எறிந்துவிட்டபின்னர் புத்தரின் ஜானம் பெற்று விட்டார் போலும் …