கல்லெறிந்து கொல்லப்பட்ட பெண் : ஆர்ப்பாட்டம்

afghan_womanதிருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்ததாக கூறி, ஆப்கானில் ஒரு இளம் பெண் கல்லெறிந்து கொல்லப்பட்டதை கண்டித்து காபூலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.

அதில் பெருமளவு பெண்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கல்லெறிந்து கொல்லும் தண்டனையை ஏற்பாடு செய்த தலிபான்களையும், அரசாங்கத்தையும் கண்டித்து அங்கிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

சிலர் போலி இரத்தம் தோய்ந்த உடையை அணிந்திருந்தனர்.

ஒரு வயோதிப நபருக்கு கட்டாய திருமணம் செய்துகொடுக்கப்படவிருந்த நிலையில், தனக்கு பிடித்த ஒரு இளைஞனுடன் தப்பி ஓடிய ரொக்ஷானா என்னும் பெண் கல்லெறிந்து கொல்லப்படும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்தச் சம்பவம் இஸ்லாத்துக்கு முரணானது என்றும் குற்றச் செயல் என்றும் அதிபர் அஷ்ரஃப் கானி கண்டித்திருந்தார். -BBC