யேமன் சண்டையில் 19 பேர் சாவு

yemenயேமனில் சவூதி கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலிலும், ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையிலும் 19 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு ராணுவம் சனிக்கிழமை கூறியது.

இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில், “இப்’ மாகாணத்தையும், தாலே மாகாணத்தையும் இணைக்கும் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த இரு வாகனங்கள் அழிக்கப்பட்டன.

தாலே மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான டாம்ட் நகரில் ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் அரசுப் படையினர் மோதலில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவங்களில் 8 அரசுப் படையினரும், 11 கிளர்ச்சியாளர்களும் உயிரிழந்தனர் என ராணுவ வட்டாரங்கள் கூறின.

யேமனின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த தாலே உள்ளிட்ட நான்கு மாகாணங்களை யேமன் ராணுவம் கடந்த ஜூலை மாதம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com