சிரியாவின் வடகிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்களும், அரேபியர்களும் அடங்கிய புதிய கூட்டணி ஒன்று இஸ்லாமிய அரசுக்கு எதிராக இராக்கிய எல்லைப் பகுதியில் களமிறங்கியுள்ளது.
சிரியாவின் ஜனநாயகப் படைகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அந்த கூட்டணி, அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களையும் வான் தாக்குதல் ஆதரவையும் பெறுகின்றது.
பிபிசியின் குயிண்டைன் சமர்வெல் அந்த குழுவுடன் சிரியாவின் நகரான அல் ஹசக்காவில் சில காலத்தை கழித்திருக்கிறார். -BBC