யாழில் ஐ.நா பிரதிநிதிகள்: காணாமல் போனோரின் உறவுகள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டம்

jaffna_missingrelative_protestஜ.நா மனிதவுரிமை ஆணைக்குழு தீர்மானம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பான கண்காணிப்பை மேற்கொள்ளும் ஜ.நா கண்காணிப்பு குழு இன்றைய தினம் யாழ் வருகை தந்துள்ள நிலையில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு குறித்த குழு யாழ் வந்திருந்தது இதன்போது யாழ். நல்லூர் பகுதியில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதனையடுத்து குறித்த குழுவினர் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 20 பேரை சந்தித்தனர். குறித்த சந்திப்பு காலை 11 மணி வரை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை நடத்திய உறவுகள் கண்ணீர்மல்க தமது உறவினர்கள் மீட்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

-http://www.tamilwin.com

TAGS: