உணவுகளை தூக்கியெறியும் அகதிகள்: மரியாதை கொடுப்பதை கற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறும் அரசியல்வாதி

refugee_respect_001ஜேர்மனியில் தங்கியிருக்கும் அகதிகள் அந்நாட்டு அரசுக்கு மரியாதை கொடுப்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று பார்வையிட்ட அரசியல்வாதியான Klaus Bouillon, என்பவர் அங்கு நடந்தவற்றை நேரிடையாக பார்த்துள்ளார்.

மேலும், அங்கு வசித்து வரும் அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அங்கு நடந்தவை குறித்து தொலைக்காட்சி ஒன்றில் விவாதித்துள்ளார்.

ஜேர்மனியில், ஆஸ்திரியா, பாலஸ்தீனம், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு வேண்டிய உணவுகளை ஜேர்மனிய அரசாங்கம் வழங்கிவருகிறது.

ஆனால், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் முரண்பாடான செயல்பாடுளில் ஈடுபடுகின்றனர்.

உணவுகளை வரிசையில் நின்றுவாங்கும்போது ஒருவரையொருவர் தள்ளிவிடுவது, உணவுகள் சரியில்லை என அவற்றை தூக்கிஎறிவது, உணவுகள் சுத்தமில்லை எனக்கூறுவது, மேலும் உணவினை பரிமாறுபவர்கள் கருப்பாக உள்ளார்கள் என அவர்களை கேலி செய்வது.

அதுமட்டுமின்றி, அகதிகள் முகாமிற்கு அதிகாரிகள் செல்லும்போது அவர்களையும் கேலி செய்வது போன்ற முரண்பாடான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர், இது மிகவும் தவறான ஒன்றாகும்.

அகதிகளுக்கு புலிடம் தரமாட்டோம் என்று நாங்கள் மறுக்கவில்லை, ஆனால் தொடர்ச்சியாக அகதிகள் வந்துகொண்டிருப்பதால் எங்களுக்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுகிறது.

ஆனால் அற்காக அகதிகள் இவ்வாறு நடந்துகொள்ளக்கூடாது என்றும், ஜேர்மனிய அரசாங்கத்திற்கு மரியாதை கொடுப்பதை அகதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

-http://world.lankasri.com