யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு ஐ நா குழுவினர் பயணம்

இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக ஐ நா வல்லுநர் குழு தெரிவித்துள்ளனர்.

151112171215_un_officials1

“முடிந்ததைச் செய்வதாக” ஐ நா அதிகாரிகள் கூறுகிறார்கள்.

வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஐ நா அதிகாரிகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தமது அமர்வுகளை வியாழக்கிழமை நடத்தினர்.

அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.

missing

ஐ நா அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் அவர்களை சந்தித்த காணாமல் போனோவர்களின் உறவினர்கள், நீண்டகாலமாக தமக்கு இலங்கை அரச தரப்பினரிடமிருந்து எவ்விதமான ஆக்கபூர்வமான பதில்கள் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

அவர்களிடம் பேசிய ஐ நா அதிகாரிகள், அம்மக்களை கண்டறிவதற்கு ஐ நா தொடர்ந்து அனுசரணை வழங்கும் என உறுதியளித்துள்ளனர்.

நிறுவன ரீதியாக மக்கள் அடைந்துள்ள துன்பங்களுக்கு, உண்மைகளைக் கண்டறிந்து நீதியையும் இழப்பீடுகளையும் பெறுகின்ற மனித உரிமை பாதிக்கபட்ட மக்களுக்கு உண்டு என தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் ஐ நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட பகுதிக்கான பயணத்தை முடித்துக் கொண்ட ஐ நா குழுவினர், வெள்ளிக்கிழமை கிழக்குப் பகுதிக்கு செல்லவுள்ளனர். -BBC

TAGS: