பத்து வயதில் கர்ப்பமாகும் குழந்தைகள்….உறவினர்களால் கற்பழிக்கப்படும் அவலம்!

10yearsbaby_001இந்த உலகில் ஆண் பெண் என இருபாலரை படைத்த இறைவன், பெண்மைக்குள் மட்டும் ஒரு உயிரை சுமக்கும் கருப்பையை படைத்தது, அவர்கள் மூலம் இந்த உலகம் உருவாக வேண்டும் என்பதற்காகவே.

சொல்லப்போனால் இந்த இடத்தில் பெண்களும் கடவுளுக்கு சமமானவர்களே, ஏனெனில் இந்த உலகில் முதல் மனித இனத்தை கடவுள் படைத்தார், அதற்கு அடுத்தபடியாக மனித இனத்தை பெண்களே படைத்து வருகிறார்கள்.

அவ்வாறு உயிர்களை சுமக்கும் பெண்ணினத்தை, ஒரு உயிரினமாகக்கூட கருதாமல், காமப்பெருமூச்சுகளால் சுட்டெறிப்பது சகிக்கமுடியாத ஒன்றாகிறது.

பெண்கள் உயிர்களை சுமப்பதற்கென்று ஒரு வயது இருக்கிறது, உடல்ரீதியாகவும், மனவலிமையிலும் அவர்கள் தகுதியான பின்னரே 22 – 26 வயதுக்கு குழந்தைகளை பெற்றெடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால், 10 வயது சிறுமிகளே குழந்தைகள் பெற்றெடுக்கும் அவலம் கௌதமாலா நாட்டில் அரங்கேறி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை முகம் மாறா வயதில் ஒரு குழந்தையை தோளில் சுமந்துகொண்டிருக்கும் அவர்களின் அழகிய முகங்களை Linda Forsell என்ற புகைப்படக்காரர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்
உலகிலேயே கௌதமாலா நாட்டின் தான் அதிகளவான சிறுமிகள் பருவத்திலேயே கர்ப்படைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலும், கற்பழிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் காரணமாகவே கர்ப்பமாகின்றனர், அதிலும் 30 சதவீதம் சிறுமிகள் தங்கள் தந்தையர்களாலேயே கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் 14 வயதுக்குட்பட்ட 5 100 சிறுமிகள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 4,354 ஆக இருந்துள்ளது.

இந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் கால்வாசி குழந்தைகள் இளம் தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைகளாக இருக்கின்றன. சில தாய்மார்கள் 13 வயது கூட பூர்த்தியடைந்திருக்கமாட்டார்கள்.

Lilian fell என்ற 11 வயது சிறுமி தனது 9 வயதில் அவளுடைய மாமாவால் கற்பழிக்கப்பட்டுள்ளார், தற்போது அவளுக்கு அழகிய ஆண்குழந்தை உள்ளது, தனது சகோதரர் மற்றும் குழந்தைகளுன் சேர்ந்து விளையாடும் காட்சி பரிதாபமாக உள்ளது.

Michelle என்ற சிறுமி பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும்போது 53 வயது முதியவரால் கற்பழிக்கப்பட்டுள்ளார், இதனால் கருவுற்ற அச்சிறுமியை அவரின் தயார், அம்முதியவருக்கே விற்பனை செய்துவிட்டார், தற்போது Michelle இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறாள்.

உறவுகொள்வது எவ்வாறு என்று அறிந்திருக்காத வயதிலேயே இச்சிறுமிகள் அனைவரும் குழந்தைபெற்றெடுத்துள்ளனர்.

மேலும், தங்களுடைய பருவத்தினருடன் சேர்ந்து இக்குழந்தை பெற்றெடுத்த சிறுமிகள் சேர்ந்து விளையாடும் காட்சிகளை பார்க்கும்போது பரிதாபத்தை ஏற்படுத்துகின்றது.

மேலும், இச்சிறுமிகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால், குழந்தைகளும் குறைந்து எடையிலேயே பிறந்து பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

கௌதமாலாவின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அமைப்பின் தலைவர் Mirna Montenegro இதுகுறித்து கூறியதாவது, பெண்குழந்தைகளை அவர்களது தந்தையர் உடமைகளாக பார்க்காமல் தங்கள் குழந்தைகளாக பார்க்கவேண்டும் என கருத்து தெரிவித்தேன், அதற்கு ஒரு தந்தையானவர் அவள் என்னுடைய உடமை, அவள் என்னுடைய மகள், அதனால் எனக்கு அவளிடம் என்ன வேண்டுமோ, அதனை நான் செய்வேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியதாவது, கௌதமாலாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், இதில் 10,000 பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி கூறுவதற்கு தைரியமாக இருக்கிறார்கள்.

இந்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்வது விளக்கமளிக்கவேண்டிய ஒன்றாகுமே தவிர இது விவாதிக்க்கூடிய விடயமல்ல என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு அந்நாட்டில் பெண்களின் திருமண வயது 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, கடந்த ஆண்டுவரை இந்த வயது 14 ஆக இருந்தது என்பது குறிப்படத்தக்கது.

-http://world.lankasri.com